Wednesday, February 10, 2010

மரம் நடு விழா

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
நாட்டுக்கு பல மரம் வளர்ப்போம் - என
மேடையில் முழங்கிய - மரக்கடை அதிபரின்
கடையை நிறைத்தது
வெட்டிய மரங்கள்...

ஹார்ட் அட்டாக்

மனிதனின் உயிருக்கு
ஸ்டார்ட் இம்மீடியட்லி என எமன்
அடிக்கும் தந்தியின்
பெயர் தான் - ஹார்ட் அட்டாக் .

மழை

உலகில் பாவிகள் செய்யும் அக்கிரமங்களை
காண முடியாமல் வானத்தில் இருக்கும்
வருண பகவான் வடிக்கின்ற கண்ணீர்தான்
மழையாக இருக்குமோ?...

ஜோதிடம்

மரத்தடி ஜோதிடர் தனக்கு
நெடு ஆயுள் என்றார் - மறு நாளே
மரம் விழுந்து அவர் மரணம்...

காந்தியம்

காந்தியத்தை பற்றி மேடையில் முழங்கிய
கதர் வேட்டிக்காரனின் கையில் கிடந்தது
ஜப்பான் டிஜிட்டல் வாட்ச்...

குழந்தைகள்

இருட்டறை
இலக்கியத்தின்
மலிவு பதிப்புகள் ....

சூரியன்

உலகில்
பகலில் நடக்கும் அக்கிரமங்களை
காண சகிக்காமல் தனக்கு
பன்னிரண்டு மணி நேரம் - போதும் என
ஒதுங்கி கொண்ட கோழை .