Monday, March 15, 2010

விதியா?! சதியா?!

அன்பு முகம் காட்ட நீ மறுக்க
ஆசை முகம் நான் மறக்க
இரு மனம் சேரும் திருமணம்
ஈனபிறவியினுடன் என புரிந்ததும்
உன்னை உதறி
ஊருக்குள் நான் வர
எட்டி உதைக்க சிலரும்
ஏய்க்க பலரும் இருக்க
ஐயோ
ஒண்ட வந்தவலோ என சுற்றத்தார் பதற
ஓட ஓட விரட்டுகிறது
விதியும் , சமூகம் - தன்
சுடு சொற்களோடும்

இது ,
விதியால் பின்னப்பட்ட சதியா
இல்லை
சதியினால் சபிக்கப்பட்ட விதியா .?!

0 comments:

Post a Comment