Monday, March 15, 2010

விதியா?! சதியா?!

அன்பு முகம் காட்ட நீ மறுக்க
ஆசை முகம் நான் மறக்க
இரு மனம் சேரும் திருமணம்
ஈனபிறவியினுடன் என புரிந்ததும்
உன்னை உதறி
ஊருக்குள் நான் வர
எட்டி உதைக்க சிலரும்
ஏய்க்க பலரும் இருக்க
ஐயோ
ஒண்ட வந்தவலோ என சுற்றத்தார் பதற
ஓட ஓட விரட்டுகிறது
விதியும் , சமூகம் - தன்
சுடு சொற்களோடும்

இது ,
விதியால் பின்னப்பட்ட சதியா
இல்லை
சதியினால் சபிக்கப்பட்ட விதியா .?!

Monday, March 8, 2010

இதய சிறை

உனைக்
கண்ட நொடி
தொலைத்தேன் என்னை
மறுநொடியே
மீட்டெடுத்தேன்
சிறைபடுத்திகொண்டேன் - உனது
இதயத்தை என் கண்களுக்குள்.....

Tuesday, March 2, 2010

ஊனம்

முன்பு
பிறரது ஊனங்களை
கேலி செய்தேன் - ஆனால்
இன்றோ நானே என்னை
நொந்து கொள்கிறேன் - ஏனென்றால்
எனது இதயம்
என் வசம் இல்லாததால்.....

காதல் குற்றம்

காதலை ஒரு குற்றமென்று
பறைசாற்றினான் பாரதிதாசன்
ஆம் ,
காதல் ஒரு குற்றம் தான்
நாம்
அதற்காக பல
தவறுகளை செய்து அதற்கு
தண்டனைகளையும் பெறுகிறோம்
அல்லவா..?!

காதல் அர்த்தம்

காதல் மிகவும் சோகமானது
ஆனால் சுகமானது
புரிந்தவர்களுக்கு அது
புனிதமானது
புரியாதவர்களுக்கு அது
பொழுதுபோக்கு....

காதல்

காற்றினும் கடிய வேகத்தில்
செல்லகூடிய காலக்குதிரைகள்
கால் இடறிக் காண நேரம்
நிற்குமிடம் தான் - காதல்

Wednesday, February 10, 2010

பிறப்பு இறப்பு

மனிதன் தான்
அழப்பிறக்கிறான் - பிறர்
அழ இறக்கிறான் .